இலங்கை

பளையில் பயிற்சிமுகாம்; கட்டுக்கதை பரப்பியவர் ரிஐடியினரால் கைது

பளைப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பயிற்சிமுகாம் இருப்பதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக காணொளி மற்றும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, உறுதிப்படுத்தப்படாத பொய்த் தகவல்களை வெளியிட்ட நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நேற்று (18) இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

 

சமூக வலைத்தளம் வாயிலாக காணொளி ஒன்றை வெளியிட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் LTTE பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தப்படாத பொய்த் தகவல்களைப் பரப்பியமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெல்லன்வில, பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவராவார்.

சந்தேகநபர் இன்று கொழும்பு முதன்மை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இலங்கை தண்டனைச் சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button