ஜோதிடம்

இன்றைய (19.08.2026) ராசி பலன்

மேஷம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.

ரிஷபம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவர். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

மிதுனம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை விற்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரம் சிறக்கும்.

கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள்.

சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து நடந்து கொள்வர். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பணியாட்கள் ஆதரிப்பர்.

கன்னி: உடன் பிறந்தவர்களால் ஆதாயமுண்டு.முரண்டு பிடித்த பிள்ளைகள் இனி சொல்பேச்சு கேட்பார்கள். தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். பேச்சில் தெளிவு பிறக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

துலாம்: முன்கோபத்தை தவிர்க்கவும். மகனின் படிப்பு, மகளின் திருமணம் தொடர்பாக டென்ஷன் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டு கொடுத்து போகவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகளை போராடி வசூலிப்பீர்.

விருச்சிகம்: எதிர்பார்த்த பணிகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர் உதவி கேட்டு வருவார். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் கருத்துகளை நிராகரிக்க வேண்டாம்.

தனுசு: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிம்மதி தரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். மேலதிகாரி பாராட்டுவார்.

கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவர். சொந்த ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம்.

மீனம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வங்கிக் கடனை பைசல் செய்வீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும். தெளிவாக பேசி பணிகளை முடித்துக் காட்டுவீர்கள்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button