உலகம்

புதிய துப்பாக்கி மீட்புத் திட்டம்! அவுஸ்திரேலிய பிரதமரின் அதிரடி நடவடிக்கை

சிட்னியின் பொண்டி கடற்கரையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற பயங்கரத் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் துப்பாக்கிக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் வகையில் புதிய துப்பாக்கி மீட்புத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நவம்பர் 2 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள இத்திட்டத்தின் கீழ், ஒப்படைக்கப்படும் ஒவ்வொரு துப்பாக்கிக்கும் 1,000 அவுஸ்திரேலிய டொலர்கள் வரை இழப்பீடாக வழங்கப்படவுள்ளது.

துப்பாக்கிகளைத் திரும்பப் பெறுவதுடன், துப்பாக்கி உரிமங்களுக்கான பரிசீலனைகளை வலுப்படுத்தவும் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.

இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த துப்பாக்கிகள் சட்டப்பூர்வமாகப் பெறப்பட்டவை என்பது தெரியவந்ததையடுத்து, மாநிலத்தில் ஒருவர் அதிகபட்சமாக 4 துப்பாக்கிகளை மட்டுமே வைத்திருக்க முடியும் என புதிய சட்டக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

தற்போது அவுஸ்திரேலியாவில் சுமார் 4.1 மில்லியனுக்கும் அதிகமான துப்பாக்கிகள் பயன்பாட்டில் உள்ளதாக அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

1996 ஆம் ஆண்டு போர்ட் ஆர்தர் பகுதியில் 35 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button