தமிழீழம்

செம்மணியில் ஒரே நாளில் 5 குழந்தைகள் உட்பட 15 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி புதைகுழி அகழாய்வின் போது, 5 குழந்தைகளுடைய என்புக்கூடுகள் உட்பட 15 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,என்புக்கூடென்றின் இடுப்பு பகுதியில் இருந்து தாயத்து ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், ஒரு ரூபாய் நாணய குற்றி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் 103 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  முன்னெடுப்பட்டன.

முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் இதுவரையிலான 103 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 539 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 524 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 49ஆவது நாளான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 5 குழந்தைகளுடைய என்புக்கூடுகள் உட்பட 15 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், என்புக் கூடொன்றின் இடுப்பு பகுதியில் இருந்து தாயத்தும், ஒரு ரூபாய் நாணய குற்றியும் மீட்கப்பட்டுள்ளது.

அதேவேளை புதைகுழிக்கு அருகில் எழுமாறாக தோண்டப்பட்ட இரு சோதனைக்குழிகளில் இருந்தும் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button