உலகம்

ஈரானின் அச்சுறுத்தலால் ரகசிய விமானத்தில் ஒழித்து ஓடிய ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துருக்கியில் இருந்து பிரிட்டனுக்கு இரகசியமாக இராணுவ விமானத்தில் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் இரகசியமாக இராணுவ விமானத்தில் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது.

கடந்த மாதம் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ட்ரம்ப் துருக்கியின் அங்காராவுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து புறப்படும்போது வழக்கமாகப் பயன்படுத்தும் எயார் போர்ஸ் ஒன் விமானத்தில் ஊடகங்கள் முன்னிலையில் அவர் ஏறியதாக தெரிவிக்கப்படுகின்றது

பழைய எயார் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த ட்ரம்ப்

எனினும், அந்த விமானம் புறப்படாத நிலையில், ஊடகவியலாளர்கள் அங்கிருந்து சென்ற பின்னர், கேட்டரிங் வாகனம் ஒன்றின் மூலம் ட்ரம்ப் வேறு விமானத்துக்கு இரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

பின்னர், பாதுகாப்புத்துறை செயலாளர் ஹெக்செத் மற்றும் இரகசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சி-32ஏ இராணுவ விமானத்தில் துருக்கியிலிருந்து பிரிட்டனுக்கு அவர் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ட்ரம்ப் இல்லாமல் பழைய எயார் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த ஊடகவியலாளர்கள் மற்றும் வெள்ளை மாளிகை ஊழியர்களிடம் விமானத்தின் ஜன்னல்களை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு பிரிட்டனில் இருந்து பின்னர் ட்ரம்ப் பாதுகாப்பாக அமெரிக்கா திரும்பியதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button