உலகம்

மேற்கு கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த பாரிய நிலநடுக்கம்

மேற்கு கொலம்பியாவில் இன்று (10) 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

நாட்டின் பல நகரங்களில் இதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

 

இந்த நிலநடுக்கத்தின் மையம் சாஃகோ திணைக்களத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மரில், போகொடாவுக்கு மேற்கே சுமார் 280 கிலோமீட்டர் தொலைவில், 107 கிலோமீற்றர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி காலை 7:34 மணிக்கு பதிவானது.

 

சாஃகோ பிராந்தியத்தின் ஆளுநர் நுபியா கரோலினா கோர்டோபா கூரி, பிராந்தியத் தலைநகரான கிப்டோவில் “காயங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது” என்பதை உறுதிப்படுத்தினார்.

 

மேலும் நிலநடுக்கத்திற்குப் பிந்தைய தொடர் அதிர்வுகள் குறித்து கவலை தெரிவித்தார்.

நாட்டின் தலைநகரான போகொடாவில், அதிர்வு பலமாக உணரப்பட்டது.

 

எச்சரிக்கை மணிகள் ஒலிக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பலர் கட்டிடங்களை விட்டு வீதிகளுக்கு வெளியேறினர்.

 

“தற்போது வரை காயங்களோ அல்லது பெரிய அளவிலான கட்டமைப்புச் சேதங்களோ பதிவாகவில்லை, சில கட்டிடங்களில் சிறிய விரிசல்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன” என்று போகொடா மேயர் கார்ட்லோஸ் கெலன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button