இலங்கைதமிழீழம்தமிழ்

நோயாளிகளிடம் கூடுதல் பணம் அறவிட்ட யாழிலுள்ள தனியார் மருத்துவமனை! 30 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்று

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக Full Blood Count (FBC) இரத்தப் பரிசோதனைக்காக நோயாளிகளிடம் கட்டணம் அறவிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு 30 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை (CAA) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, யாழ்ப்பாணம் கந்தர்மடம், பலாலி வீதியில் அமைந்துள்ள Venus Speciality Hospital (Pvt) Ltd நிறுவனமானது, FBC பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச கட்டணமான ரூ.400-க்கு பதிலாக ரூ.550 அறவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 13 அன்று CAA அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின் போது இந்த விதிமீறல் கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. நேற்று ஜூலை 21 அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மருத்துவமனை குற்றத்தை ஒப்புக்கொண்டது.

இதையடுத்து, நீதிமன்றம் ரூ.30 இலட்சம் அபராதம் விதித்ததுடன், குற்றம் தொடர்பான அறிவிப்பை தேசிய செய்தித்தாள்களில் தமது சொந்த செலவில் வெளியிடவும் மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.

அதேவேளை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் சேவைகளைப் பெறும் பொதுமக்கள் அரசு நிர்ணயித்த கட்டணங்களை சரிபார்க்க வேண்டும், அதிகாரப்பூர்வ ரசீதை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும், மேலும் அதிக கட்டணம் அறவிடப்பட்டால் 1977 என்ற உதவி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறும் CAA அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button