உலகம்சுவிஸ்

விவாகரத்து’ என்ற வார்த்தையை நீக்குங்கள்… சுவிட்சர்லாந்தில் புதிய அரசியல் முயற்சி!

சுவிட்சர்லாந்தில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வழங்கப்படும்  படிவங்களில் இடம்பெறும் “விவாகரத்து” என்ற திருமண நிலைத் தேர்வை நீக்க வேண்டும் என்ற புதிய அரசியல் முன்மொழிவு தற்போது பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

FDP தேசிய கவுன்சில் உறுப்பினர் நதீன் கோபெட், இன்றைய சமூகத்தில் சுமார் 40 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிவடைகின்றன என்பதால், “விவாகரத்து” என்ற தனி வகைப்பாடு காலாவதியானது என்றும் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்

விவாகரத்து பெற்ற பலரும் இந்த யோசனையை வரவேற்றுள்ளனர். படிவங்களை நிரப்பும் ஒவ்வொரு முறையும், கடந்த காலத்தை மீண்டும் நினைவுபடுத்தும் ஒரு நிரந்தர முத்திரை போல அந்தப் பெட்டி உணரப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஒருவர், “‘விவாகரத்து’ என்ற வார்த்தையைப் பார்க்கும்போது, அது தோல்வி என்ற உணர்வைத் தருகிறது” எனக் கூறியுள்ளார். மேலும், திருமணம் முடிவடைந்தது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே தவிர, வாழ்நாள் முழுவதும் சுமக்க வேண்டிய அடையாளமாக இருக்கக் கூடாது என்றும் பலர் வலியுறுத்துகின்றனர்.

அதேவேளையில், சட்ட மற்றும் நிர்வாக காரணங்களுக்காக திருமண நிலை சில சந்தர்ப்பங்களில் அவசியம் என்பதால், இந்த முன்மொழிவு குறித்து தொடர்ந்து அரசியல் மற்றும் சமூக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த விவகாரம் குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button