உலகம்கனடா

கனடாவின் தீர்மானத்துக்கு பதிலடியாக இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி விதிக்க டிரம்ப் தீர்மானம்

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.

இந்த வரி விதிப்பு 30 நாட்களுக்குள் அமுல்படுத்தப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க வர்த்தகக் கொள்கைக்கு எதிராக கனடா செயல்படுவதன் காரணமாகவே இந்த புதிய வரி விதிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்களுக்கு கனடா வரி விதிக்க எடுத்த தீர்மானத்திற்குப் பதிலடியாகவே அமெரிக்க ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கனடாவினால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்கள் உட்பட பலதரப்பட்ட பொருட்களுக்கு இந்த புதிய வரி விதிப்பு அமுல்படுத்தப்பட உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button