உலகம்விளையாட்டு

2026 உலகக் கிண்ண கால்பந்து: பிரான்ஸை வீழ்த்தி 3 ஆவது இடத்தை பிடித்த இங்கிலாந்து!

விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும்  2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ் அணியை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளது.

இங்கிலாந்து அணியின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு புகாயோ சாகா அடித்த ​ஹெட்ரிக் கோல்கள் முக்கிய காரணமாக அமைந்தது.

மியாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே இங்கிலாந்தின் டெக்லான் ரைஸ் முதல் கோலை அடித்து கணக்கைத் தொடங்கினார்.

 

தொடர்ந்து அதிரடி காட்டிய இங்கிலாந்து அணிக்கு 18-வது நிமிடத்தில் எஸ்ரி கோன்சாவும், 37 மற்றும் 45+1 நிமிடங்களில் புகாயோ சாகாவும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர்.

இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது.

 

இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணி ஆக்ரோஷமாக பதிலடி கொடுக்கத் தொடங்கியது. பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே 48 மற்றும் 66 ஆகிய நிமிடங்களில் இரண்டு கோல்களையும், 54-வது நிமிடத்தில் பிராட்லி பார்கோலாவும் கோல் அடித்து இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

 

இருப்பினும், ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய புகாயோ சாகா, தனது 3-வது கோலை பதிவு செய்து ஹெட்ரிக் சாதனையுடன் இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.

 

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+6′) பிரான்ஸின் உஸ்மானே டெம்பேலே ஒரு கோல் அடித்த போதிலும், அடுத்த இரண்டு நிமிடங்களில் (90+8′) இங்கிலாந்தின் ஜூட் பெலிங்ஹாம் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 6-4 என்ற கணக்கில் முடித்து வைத்தார்.

 

1966-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றதற்குப் பிறகு, உலகக் கிண்ண தொடர் ஒன்றில் இங்கிலாந்து அணி பெறும் மிகச்சிறந்த தரவரிசை (3-வது இடம்) இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button