இலங்கைதமிழீழம்தமிழ்

மனதை கனமாக்கு வகையில் புதைக்கப்பட்டுள்ள மனிதர்கள்; செம்மணி மனித புதைகுழியில் மீண்டும் அவலம்

யாழ்ப்பாணம் – அரியாலை செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 36 ஆம் நாள் அகழ்வு இன்று நடைபெற்றது.
இதன்போது மேலும் 6 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில் ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன் சிறியவரின் என்புக்கூடு உள்ளடங்கலாக  06 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் வெள்ளை நிறத்திலான பாசிமணி, இரும்புத்துண்டு, வளையல் என்பவை பிற சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் மூன்று மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஒரு மண்டையோடு வித்தியாசமான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 90 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,437 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 428 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button