உலகம்விளையாட்டு

‘குழந்தை யமாலுடன் நான்’ வைரல் புகைப்படம் தொடர்பில் மனம் திறந்த மெஸ்சி

2026 FIFA உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் லமின் யமாலை எதிர்கொள்வது “நம்ப முடியாத விஷயம்” என அர்ஜென்டினா அணித்தலைவர் லியோனல் மெஸ்சி தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு, யமால் குழந்தையாக இருந்தபோது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது.

2007ஆம் ஆண்டு, பார்சிலோனாவின் தொண்டு நிகழ்ச்சியில் யமாலின் பெற்றோர் வென்ற பரிசின் மூலம், அப்போது 20 வயதாக இருந்த மெஸ்சி, ஐந்து மாதக் குழந்தையான யமாலை கையில் ஏந்தியபடி கேம்ப் நௌ உடைமாற்றும் அறையில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

நியூயார்க்கில் நடைபெற்ற FIFA ரசிகர் நிகழ்வில் பேசிய மெஸ்சி,“அந்தப் புகைப்படம் நம்ப முடியாத ஒன்று. இப்போது நாங்கள் இருவரும் உலகக் கோப்பையில் ஒருவரை ஒருவர் எதிர்கொள்கிறோம் என்பது உண்மையிலேயே பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது.”என்றார்.

மேலும் அவர்,“நான் குழந்தையாக இருந்த அவருடன் ஒரு புகைப்படம் எடுத்தேன். இன்று உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அவருக்கு எதிராக விளையாட இருக்கிறேன். அதுதான் வாழ்க்கை.”எனவும் கூறினார்.

39 வயதான மெஸ்சி, ஸ்பெயின் இளம் நட்சத்திரம் யமாலை பாராட்டியும் பேசினார்.

“தற்போது உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக அவர் இருக்கிறார். அவர் ஒரு அற்புதமான வீரர், உலகளாவிய நட்சத்திரம். அவருக்கு இன்னும் 19 வயதுதான்; மிக நீண்ட எதிர்காலம் இருக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகள். ஆனால் இந்த முறை அவர் சாம்பியனாகாமல் இருக்க நாங்கள் முழு முயற்சியையும் செய்வோம்.”என மெஸ்சி தெரிவித்தார்.

மெஸ்சியின் புகழ்பெற்ற பார்சிலோனா 10ஆம் இலக்க ஜெர்சியை தற்போது அணிந்துவரும் லமின் யமால், யூரோ 2024பட்டத்தை வென்றுள்ளார். தற்போது, UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பும் FIFA உலகக் கோப்பையும் வென்ற இளம் வயது வீரர் என்ற சாதனையை படைக்க அவர் முயற்சித்து வருகிறார்.

அர்ஜென்டினா – ஸ்பெயின் அணிகள் மோதும் 2026 FIFA உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button