தமிழீழம்தமிழ்

தனது கொடும்பாவி எரித்தமைக்கு பழி தீர்க்க கிளிநொச்சி DCC கூட்டத்தை பயன்படுத்தி குழப்பிய அர்ச்சுனா எம்.பி

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஏற்படுத்திய அமைதியின்மை காரணமாக, அரச அதிகாரிகள் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளதுடன் குறித்த  உறுப்பினர் வலுக்கட்டாயமாக கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்

கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) காலை இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா, பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதுடன், விவசாயத் துறை தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுக்கொண்டிருந்தது.

அப்போது வழமைபோன்று தனது பாணியில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, பேச ஆரம்பித்தார் தனது கையில் ஆதாரங்கள் இருப்பதாகவும் அதை வாசிக்கின்றேன் கேழுங்கள் என கூறி ஒரு கடிதத்தை வாசித்தார். திருவையாறு பகுதியில் அமைச்சர் லால்காந்த  நடப்பட்ட தென்னை செய்கையில் விநியோகத்தில் மோசடி மற்றும் தென்னை நடுகையில் மோசடி இடம் பெற்றுள்ளதாக கூறினார்.

குறித்த கேள்விக்கு விளக்கம் சொல்ல முற்பட்ட அதிகாரிகளை கதைக்க விடாமல் வழமைபோன்று தான் நினைப்பதை கத்தி கத்தி கூறிக்கொண்டிருந்தார்.மோசடி செய்கிறீர்கள் என மீண்டும் மீண்டும் கூறினார். ஆத்திரமடைந்த அதிகாரி விளக்கத்தை மீண்டும் கூற ஆரம்பித்தார்.

ஆனால்  அர்ச்சுனா வழமைபோன்று அதிகாரிகளை அவதூறாக பேசிக்கொண்டிருந்தார். சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துக்களை அடுத்து தொடர் வாக்குவாதங்கள் முற்றிய நிலையில் கூட்டத்தில் இருந்த பலரும் அவரை வெளியேற்றுங்கள் என கூச்சலிட்டனர்.

 

ஊழல் நடந்தமைக்கான ஆதாரத்தை வழங்குமாறு அரச அதிபர் கேட்டபோது கொடுக்க மறுத்த அர்ச்சுனா, மோசடிகளுக்கு அரச அதிபரும் உடந்தையாக இருக்கிறீர் என தாறுமாறாக பேசத்தொடங்கினர்.ஆத்திரமடைந்த அரச அதிபர் நீங்கள் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது உடனடியாக என்மீது உள்ள குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை தருமாறு கேட்டார்.

ஆனால் அதை தரமாட்டேன் என அர்ச்சுனா அடம்பிடித்துக்கொண்டு , சபையில் இருந்த அதிகாரிகள் அமைப்பினரை கள்ளர்கள் என உளறித்தள்ளினார்.

உடனடியாக பேச்சை மாற்றி இதை கதைத்தால் எனது கொடும்பாவியை எரிப்பீர்களா எனது கொடும்பாவி அரச அதிபர் அலுவலகத்துக்கு முன் எரிக்கப்பட்டது ஆகவே அவரும் மோசடிக்கு உடந்தை என உளறினார்.

அதன் பின்னர் தான் பலருக்கும் புரிந்தது தனது கொடும்பாவி எரித்ததற்கு பழிவாங்கும் விதமாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தேவையற்ற கருத்துக்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து கூட்டத்தை குழப்புகிறார் என, உடனடியாக கூட்டத்தில் இருந்த அதிகாரிகள் வெளியேற தொடங்கினார்கள்.

குபைத்தியத்தை வெளியேற்றுங்கள் அல்லது நாங்கள் வெளியேறுகிறோம் என அமைப்புக்களின் பிரதிநிதிகள் மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர்.

இந்தநிலையில், முழு பைத்தியம் போல் தனியாக இருந்து அர்ச்சுனா எம்பி பலரையும் கோபமூட்டும் விதமாக தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார் . அர்ச்சுனாவை பேச வேண்டாம் என அமைச்சர் தடுத்தபோது தான் பேசுவேன் என அதட்டும் தொணியில் கூறிய அமைச்சரை தாக்கும் நோக்குடன் அர்ச்சுனா ஆவேசமாக எழும்புவது போல  எழும்பினார். பின்னர் பொலிசார் அவரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

 

கூட்டம் இடைநிறுத்தப்பட்டதால் அங்குவந்த பலரும் தனி ஒருவரால் மிகவும் பயனுள்ள கூட்டம் தடைப்பட்டுவிட்டது முக்கிய விடயங்களுக்கு அனுமதி பெறமுடியவில்லை என தெரிவித்துக்கொண்டு சென்றமையை காணமுடிந்தது.

 

தனிப்பட்ட பிரச்சினையை பொது கூட்டங்களில் கதைத்து வீண்டிக்கு இந்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை இனிவரும் காலங்களில் அனுமதிக்க கூடாது என பலரும் கோரிக்கை விடுத்துச்சென்றனர்.

 

ஏனென்னால் மோசடி மோசடி என எழுமாத்தமாக பலர் மேல் அபாண்ட குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ள இந்த உறுப்பினரால் எந்தவிதமான பயனும் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதுடன் குழப்பங்கள் மட்டுமே மிச்சமாக உள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்கா சிறை செல்வதும் எதிர்த்து கதைப்பவர்களைலபழிவாங்க பொது கூட்டங்களை பயன்படுத்தி குழப்புவதையுமே இந்த அர்ச்சுனா என்பவர் முழு நேர தொழிலாக ஈடுபட்டு வருகிறார் என பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button