உலகம்சர்வதேசம்விளையாட்டு

உலகக் கோப்பை காலிறுதிப் போட்டி: தோல்வியால் பிரிட்டிஷ் ஏர்வேஸின் லோகோவை வைத்த நோர்வேஜியன் ஏர்!

உலகத்தின் கவனத்தையீர்த்த பந்தையம்

இங்கிலாந்து – நோர்வே இடையிலான FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியை முன்னிட்டு, நோர்வேஜியன் ஏர் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனங்கள் சமூக வலைத்தளத்தில் நட்புறவான சவால் ஒன்றில் ஈடுபட்டன.

அந்தச் சவாலின்படி, போட்டியில் தோல்வியடைந்த நாட்டின் விமான நிறுவனம், வெற்றி பெற்ற நாட்டின் விமான நிறுவனத்தின் Instagram சுயவிவர (Profile) லோகோவை ஒரு நாள் பயன்படுத்த வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சவாலை பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஏற்றுக்கொண்டதுடன், போட்டிக்கு முன் இரு நிறுவனங்களும் நகைச்சுவையான பதிவுகளைப் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

பின்னர், கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து 2–1 என்ற கோல் கணக்கில் நோர்வேயை வீழ்த்தியதைத் தொடர்ந்து, ஒப்பந்தத்தை மதித்து நோர்வேஜியன் ஏர் தனது Instagram லோகோவை பிரிட்டிஷ் ஏர்வேஸின் புகழ்பெற்ற “Speedmarque” லோகோவாக தற்காலிகமாக மாற்றியது.

மேலும், இங்கிலாந்து அணிக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கும் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்காக வாழ்த்துகளையும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நட்புறவான சமூக வலைத்தளச் சவால் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், பிற விமான நிறுவனங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமூக வலைத்தளங்களில் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்ற இந்தப் பிரச்சாரம், உலகளாவிய அளவில் மிகப்பெரிய ஈடுபாட்டை உருவாக்கிய வெற்றிகரமான முயற்சி என நோர்வேஜியன் ஏர் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button