
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று (11) சனிக்கிழமை திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டஉ விளக்கேற்றி, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இரா. சம்பந்தனின் அரசியல் பயணத்தையும் தமிழர் சமூகத்திற்கான பங்களிப்புகளையும் நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெற்றன.இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் நினைவுப் பேருரையாற்றி, இரா. சம்பந்தனின் தலைமைத்துவம் மற்றும் அரசியல் சேவைகளை நினைவுகூர்ந்தார்.
அத்துடன், பிரதேச சபை மற்றும் மாநகர சபை பிரதிநிதிகள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.







