உலகம்விளையாட்டு

பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் சென்ற ஸ்பெயின்

உலகக் கிண்ணம் கால்பந்தாட்ட தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

போட்டியின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு 30-வது நிமிடத்தில் பாபியன் ரூயிஸ் கோல் அடித்து முன்னிலையை பெற்றுக் கொடுத்தார்.  இதற்கு பதிலடி கொடுத்த பெல்ஜியம் அணியின் சார்ல்ஸ் டி கெட்லேரே, 41-வது நிமிடத்தில் தலையால் ஒரு கோல் அடித்தார்.

இதனால், ஆட்டம் 1-1 என்ற சமநிலைக்கு வந்தது.

போட்டியின் 2-வது பாதியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடின.

ஆட்டம் மேலதிக நேரத்தை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 88-வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய மிகேல் மெரினோ வெற்றிக்கான கோலை பதிவு செய்தார்.

இதனால் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி அரையிறுதியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button