
ஈழத்தில் உள்ள எமது உறவுகளின் நல்வாழ்வை மேம்படுத்தும் உன்னத நோக்கில், நடப்பு 2026 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் வடக்கு,கிழக்கு மற்றும் மலையகத்தில் பிரம்மாண்ட மருத்துவ முகாம்களை நடத்த தமிழ்க் கல்விச்சேவை சுவிட்சர்லாந்து (Tamil Education Service Switzerland) நிறுவனம் முன்முயற்சி எடுத்துள்ளது.

“சிகிச்சை, வழிகாட்டல், வலுவூட்டல்” என்ற தாரக மந்திரத்துடன் இந்த மருத்துவ முகாம்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவ முகாம்கள் எதிர்வரும் 2026 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் தாயகத்தில் வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், மலையகப் பகுதிகளில் நடைபெறவுள்ளன.
மருத்துவ நிபுணர்களுக்கு அழைப்பு
இந்த உன்னத மக்கள் சேவையில் தங்களின் பங்களிப்பை வழங்குமாறு சுவிட்சர்லாந்து மற்றும் உலகின் ஏனைய நாடுகளிலும் வாழும் தமிழ் மருத்துவத் துறை சார்ந்தவர்களுக்கு தமிழ்க் கல்விச்சேவை அன்பான அழைப்பை விடுத்துள்ளது.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
• மருத்துவர்கள் (Doctors)
• செவிலியர்கள் / தாதியர்கள் (Nurses)
• மருத்துவத்துறை நிபுணர்கள் (Medical Specialists)
• மருத்துவத்துறை மாணவர்கள் (Medical Students)
பயண மற்றும் தங்குமிட விபரங்கள்:
• விமானப் பயணம்: முகாமில் கலந்துகொள்ளும் ஆர்வலர்கள் தங்களின் சொந்த விமானப் பயணச்சீட்டுச் செலவை (Flight Ticket Cost) மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
• ஏனைய ஏற்பாடுகள்: தங்குமிடம், உணவு, உள்ளூர் போக்குவரத்து (Local transport & accommodation) உள்ளிட்ட மற்ற அனைத்து அத்தியாவசிய ஏற்பாடுகளையும் தமிழ்க் கல்விச்சேவை சுவிட்சர்லாந்து நிறுவனமே பொறுப்பேற்று முழுமையாகச் செய்து தரும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்
தொடர்புகளுக்கு:
இந்த அறப்பணியில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும் மருத்துவத் துறையினர் மற்றும் விபரங்களை அறிய விரும்புவோர் பின்வரும் எண்களை அல்லது மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளலாம்:
• தொலைபேசி எண்கள்: +41 78 721 75 48, +41 76 538 48 32
• மின்னஞ்சல் முகவரி: [email protected]
தாயக உறவுகளின் ஆரோக்கியம் காக்கும் இந்த உன்னத சேவையில் கரம் கோர்ப்போம்!
தகவல்: தமிழ் கல்விச்சேவை






