அரசியல்உலகம்

சர்வதேச விசாரணை கோரும் ரஷ்யா!

2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து உக்ரைன் மேற்கொண்ட தாக்குதல்களில் 8,500-க்கும் மேற்பட்ட ரஷிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் சிறப்புத் தூதர் ரோடியன் மிரோஷ்னிக் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, 2022 பிப்ரவரி முதல் 2026 ஜூன் 30 வரை ரஷ்ய எல்லைப் பகுதிகளில் உக்ரைன் மேற்கொண்ட தாக்குதல்களில் 8,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதில் 373 குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தாக்குதல்களில் சுமார் 30,913 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ரஷ்யாவின் 42 பிராந்தியங்களில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

ரஷ்யாவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்திற்கு ரஷ்யா கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த கான்ஸ்டான்டினோவ்கா நகரை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்த முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், ரஷ்ய எல்லைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் உக்ரைனின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு வளையம் உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button