அரசியல்இந்தியாஇலங்கைதமிழீழம்தமிழ்தமிழ் நாடுபுதிய செய்திகள்

தமிழக முதலமைச்சரை சந்தித்த ஈழத்தின் தமிழ் தேசிய பேரவையினர்; கோரிக்கை கடிதமும் கையளிப்பு

இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புகளில் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக விளங்கும் தமிழ்த் தேசியப் பேரவையினர் இன்று சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் யோசப் விஜையை  தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் எழுத்துமூலமாக கோரிக்கை கடிதம் ஒன்றினையும் கையளித்துள்ளனர்

இச்சந்திப்பில், ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல், மனித உரிமைகள் பிரச்சினைகள், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம், இந்திய–ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணும் நடவடிக்கைகள், இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

குறித்த சந்திப்பில், ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், தமிழ்த் தேசியப் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். செல்வராசா கஜேந்திரன் – (பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)  பொன்னுத்துரை ஐங்கரநேசன் –( தலைவர், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் )கே. வி. தவராசா – (தலைவர், ஜனநாயகத் தமிழர் கட்சி, ஜனாதிபதி சட்டத்தரணி ) தருமலிங்கம் சுரேஷ் – (தேசிய அமைப்பாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி )கனகரட்ணம் சுகாஷ் – (உத்தியோகபூர்வ பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணி), நடராஜர் காண்டீபன் – (கொள்கைப் பரப்புச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணி)ஆகியோர் கலந்துகொண்டனர்

அவர்கள் முதலமைச்சரிடம் கொடுத்த கோரிக்கை கடிதம் வருமாறு ,

மாண்புமிகு சந்திரசேகர் ஜோசப் விஜய் முதலமைச்சர் –

தமிழ் நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு,

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பானது ஈழத் தமிழர் அரசியலில் களப்பணியாற்றும் தமிழ்த் தேசியப் பேரவையினர் ஆகிய எம்மைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியமைக்கு எமது உளமார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றோம். ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக, தமிழக அரசினதும் தமிழக மக்களதும் ஆதரவைப் பெறும் நோக்கில், ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் கடந்த காலங்களில் தமிழக அரசுடனும் தமிழக அரசியல் கட்சிகளுடனும் தமிழக மக்களுடனும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களையும் தொடர்பாடல்களையும் மேற்கொண்டு வந்திருந்தார்கள்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஜனநாயக முயற்சிகளும் சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனை கொண்ட சிறிலங்காவின் ஆட்சியாளர்களால் உதாசீனம் செய்யப்பட்டு தமிழ் மக்கள் மீது ஆயுதப் போராட்டம் திணிக்கப்பட்ட நிலையில், தமிழ் மக்களது உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழீழ விடுதலை புலிகள் இயக்கமும் கூட தமிழகத்தின் அனைத்து தரப்பினருடனும் தொடர்புகளை பேணியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, கடந்த 18.12.2025 அன்று அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் அவர்களையும் நாம் சந்தித்து, ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாகவும், தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட அடிப்படை அரசியல் அபிலாசைகளை முற்றிலும் புறக்கணித்து சிறிலங்கா அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பின் ஆபத்துகள் குறித்தும், விரிவாக எடுத்துரைத்திருந்தோம். அந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து, 11.01.2026 அன்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் அவர்களால் இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் மூலம், சிறீலங்காவில் ஆட்சியிலுள்ள ‘அனுரகுமார அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருந்த “ஏக்ய ராஜ்ய” (ஒற்றையாட்சி) அரசியலமைப்பின் ஆபத்துகள் குறித்து இந்திய ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்ததுடன், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமாயின், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 1985 ஆம் ஆண்டு இந்தியாவின் அனுசரணையுடன், திம்பு மகாநாட்டில் ஈழத்தமிழ்ப் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய அரசியல் யாப்பு அமைய வேண்டும் என்பதனைத் தமிழர் கோரி நிற்கின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

தற்போது – தாங்கள் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழகத்தின் வரலாற்று கடமையும் பொறுப்புமான, ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் தொடர்ச்சியான நிலைப்பாடு மேலும் வலுப்பெறும் என்ற உறுதியான நம்பிக்கையுடனேயே தங்களைச் சந்திக்க நாம் வந்துள்ளோம் என்பதுடன், இந்தக் கடிதத்தையும் தங்களிடம் சமர்ப்பிக்கின்றோம். ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றை தாங்கள் நன்கு அறிந்தவர். 1987ம் ஆண்டு இந்தியாவின் அனுசரணையில் இந்திய – சிறிலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. சிறிலங்காத் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலே தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்ற விடயம் குறித்த ஒப்பந்தத்திலே ஏற்றுக் கொள்ளப்பட்டு, குறித்த வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒரு அலகாகக் கொண்டு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது கோட்பாட்டளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுமிருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதாகக் கூறிய சிறிலங்கா அரசு, 13ஆவது திருத்தத்தையும் அதனூடாக மாகாணசபை முறைமை உருவாக்கத்தையும் ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள் மேற்கொண்டதன் மூலம், இந்திய – சிறிலங்கா ஒப்பந்தத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்ட, ஈழத் தமிழர்களது அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும் என்ற கோட்பாட்டு வேணவாக்களை அடியோடு நிராகரித்தது. மிகவும் தந்திரமாக நிராகரிக்கும் நோக்கிலேயே சிறிலங்கா அரசினால் ஒற்றையாட்சிக்குட்பட்டதாக குறித்த மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. 13ம் திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமை சிறிலங்காவின் இறுக்கமான ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள்; உள்வாங்கப்பட்டுள்ளமையினால் மாகாண சபைகளுக்கு எந்தவொரு அதிகாரமும் பகிர்ந்தளிக்கப்பட முடியாதென்றும் – அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதென்றும் சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் (Supreme Court) தீர்ப்பளித்துள்ளது. குறித்த IN RE THE THIRTEENTH AMENDMENT TO THE CONSTITUTION AND THE PROVINCIAL COUNCILS BILL [1987(2SLR)312] தீர்ப்;பின் பிரித்தெடுக்கப்பட்ட பகுதியின் சுருக்கம் கீழ்வருமாறு: ‘சமஸ்டி ஆட்சி’ (Federal) என்ற சொற்பதத்திற்கு எதிர்மறையாகவே (உழவெசயனளைவைெஉவழைெ) அரசியலமைப்பின் 2-வது உறுப்புரையில் ‘ஒற்றை ஆட்சி’ (Unitary) என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சமஸ்டி ஆட்சி என்பது> அரைகுறை-சுயாட்சி (semi-autonomous) அதிகாரம் கொண்ட அலகுகள் ஒன்றிணைந்து> மத்திக்கும் அந்த அரைகுறை சுயாட்சி அலகுகளுக்கும் இடையில் இறைமை அதிகாரங்கள் பகிரப்பட்டிருக்கும் அமைப்பைக் குறிக்கும்.

ஒற்றை ஆட்சி அரசு ஒன்றில் (Unitary state) தேசிய அரசாங்கமே சட்டரீதியாக மற்ற அனைத்து அதிகாரமட்டங்களையும் விட மேலான உச்ச அதிகாரத்தைக் கொண்டிருக்கும். ஒற்றை ஆட்சியின் சாராம்சம் என்பது, இறைமை அதிகாரம் பகிரப்படமுடியாததாக (undivided) இருக்கும். வேறு வார்த்தைகளில் கூறினால்> மத்திய அரசின் அதிகாரங்கள் வரையறையற்றதாக (unrestricted) இருப்பதாகும். ஒற்றை ஆட்சி அரசின் இரண்டு அடிப்படைப் பண்புகள்: (1) மத்திய பாராளுமன்றமே அதி உச்ச அதிகாரங்களைக் கொண்டிருக்கும். (supremacy of the central parliament) (2).இறைமை அதிகாரமுடைய (subsidiary sovereign bodies) துணை நிலை அமைப்புகளைக் கொண்டிராது. இது குறித்து நிற்பது, சட்டத்தை ஆக்கும் துணைநிலை அமைப்புகள் இருக்க முடியாது என்பதல்ல. அவ்வாறு இருந்தாலும் குறித்த சட்டவாக்க துணை அமைப்புகள் மத்திய அரசின் மீயுயர் அதிகாரங்களுக்கு அமைய உருவாக்கப்படவும் கலைக்கப்படவும் முடியும் என்பதையே குறித்து நிற்கின்றது. எனவே> இதன் அடிப்படையில் எந்தவிதமான அர்த்தப்படுததலின்போதும்> மேற்படி சட்டவாக்க துணை அமைப்புகளை இறைமை அதிகாரம் கொண்ட துணை அமைப்புகள் (subsidiary sovereign bodies) என அழைக்க முடியாது என்பதனையே இது குறித்து நிற்கின்றது. இறுதியாக, மத்திய அரசாங்கத்தினால் சட்டரீதியாக கையாளப்பட முடியாத முரண்பாடுகள் மத்திய அரசாங்கத்திற்கும் பிற அதிகார மையங்களுக்கும் இடையில் உருவாகும் சாத்தியப்பாடுகள் இல்லை என்பதையே இது குறிக்கிறது. ஆகவே, ஓர் ஒற்றை ஆட்சி அரசாங்கத்திற்கு அடிப்படையாக இருப்பவை: 1. மத்திய பாராளுமன்றமே அதி உச்ச அதிகாரங்களைக் கொண்டிருக்கும். (supremacy of the central parliament) 2. இறைமை அதிகாரமுடைய (subsidiary sovereign bodies) துணை நிலை அமைப்புகளைக் கொண்டிராது. இதற்கு மாறாக> சமஸ்டி அரசில் (Federal state) ஆட்சி அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே பகிரப்பட்டிருக்கும். அவை ஒன்றுக்கொன்று குறைவான அதிகாரங்களைக் கொண்டவையல்ல. மாறாக, தத்தம் எல்லைகளுக்குள் சமமான அதிகாரமும் சுயாதீனமும் கொண்டவையாக இருக்கும். ஓன்றுக்கொன்று சுயாதீனமான சமமான அதிகாரம் கொண்ட அமைப்புகள் இருப்பதே சமஸ்டி ஆட்சியின் தத்துவங்களாகும். சமஸ்டி அரசாங்கம் சில விடயங்களில் இறைமை அதிகாரத்தைக் கொண்டிருருக்கும்; மாநில அரசாங்கங்கள் ஏனைய விடயங்களில் இறைமை அதிகாரத்தைக் கொண்டிருக்கும் அவை ஒவ்வொன்றும் தத்தம் எல்லைகளுக்குள், மற்றொன்றின் கட்டுப்பாடின்றி தங்கள் அதிகாரங்களைச் செயல்படுத்தும்;. ஒன்றின் அதிகாரம் மற்றொன்றுக்குக் குறைவானதல்ல. இந்த அம்சமே சமஸ்டி அரசியலமைப்பையும் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் வேறுபடுத்தி நிற்கிறது. ஒற்றையாட்சி அரசியலமைப்பில், இறைமை அதிகாரம் முழுமையாக மத்திய அரசிடமே நிலைத்திருக்கும். (குறித்த தீர்ப்பின் பிரதி இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.)

இந்திய – சிறிலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 38 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட 13ம் திருத்தமும், மாகாணசபை முறைமையும் எந்த வகையிலும் ஈழத் தமிழ் மக்களுக்கான தீர்வின் ஆரம்பப்புள்ளியாகக் கூட அமையவில்லை. தமிழ் மக்களுக்குரிய அதிகாரப் பரவலாக்கல் என்ற போர்வையில், ஒரு கையால் கொடுப்பது போல் கொடுத்து – மறு கையால் பறித்தெடுக்கும் வகையில் ஓற்றையாட்சி அரசியலமைப்புக்குள் 13 ம் திருத்தச் சட்டம் அமைந்திருந்த காரணத்தாலேயே, தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏனைய தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டிருந்த அனைத்துக் கட்சிகளும் 13 ம் திருத்தம் உள்ளிட்ட ஒற்றையாட்சி முறைமைக்கு உட்பட்ட விடயங்களை அடியோடு நிராகரித்து வந்தனர். இதனையே 2009 க்குப் பின்னரான அனைத்துத் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் மிகத் தெளிவான ஆணையாகவும் வழங்கி வந்துள்ளனர். இந்நிலையில் – இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 2015-2019 காலப்பகுதியில் பதவி வகித்த அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட ‘ஏக்ய ராஜ்ய’ (ஒற்றையாட்சி என்பதன் சிங்களச் சொற்பதம்) வரைபை இறுதிப்படுத்தி நிறைவேற்றப்போவதாக தற்போதய அரசாங்கம் அறிவித்திருந்தது. கடந்த 2024 சனாதிபதித் தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன்,; அவரது தலைமையிலான அரசாங்கத்தின் உயர் மட்டத் தலைவர்களாலும் இக்கருத்து தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.. இந்த ‘ஏக்ய ராஜ்ய’ வரையானது ஏற்கனவே தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தினை விடவும் மிகவும் பலவீனமானது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே> தமிழ்த் தேசம்> இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி ஆட்சி முறைமைக்கு சிறிலங்காவின் அரசியலமைப்பு முறைமை மாற்றப்பட்டால் மட்டுமே தமிழ்த் தேசத்துடைய தனித்துவமும்; அடையாளமும் பாதுகாக்கப்படும். சிங்கள பௌத்த பேரினவாத மகாவம்ச மனநிலைக்குள் நின்று, தமிழினவழிப்பை மேற்கொண்டுவரும் ஒற்றையாட்சி முறைமைக்குள் ஒருபோதும் பாதுகாக்க முடியாது என்பதே வரலாற்று அனுபவமாகும். இந்நிலையில்> தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்களும்> அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழக வெற்றிக் கழகமும், அதன் தலைவரான தாங்களும் மத்திய அரசு ஊடாக – • சிறிலங்கா அரசு மீது அழுத்தங்களை பிரயோகித்து ஏக்கிய ராஜ்ய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதை தடுத்து நிறுத்தவும்> • தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்;வாக புதிய அரசியல் அமைப்பில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில்> சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி (federal constitution) முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே ஈழத் தமிழ் மக்களுடைய அவசரமான எதிர்பார்ப்பாகும்.

சிறிலங்காவின் பொருளாதாரம் பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் இன்றைய சூழலில்> சிறிலங்காவை மீளவும் கட்டியெழுப்புவதற்கு கணிசமான பங்களிப்பினை இந்தியா வழங்கிவருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் மீது கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தி, தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வை இந்தியாவினால் சாத்தியமாக்க முடியும். இவ்விடயம் தொடர்பில் – தமிழக வெற்றிக் கழகம் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதோடு> அதனையே தமிழக அரசின் நிலைப்பாடாகவும் வெளிப்படுத்தி, இந்நிலைப்பாட்டை இந்திய ஒன்றிய அரசையும் ஆதரிக்க வலியுறுத்த வேண்டுமென அன்புரிமையுடன் எதிர்பார்க்கின்றோம். தமிழக அரசும், தமிழகத்தின் அரசியல் கட்சிகளும், ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக கடந்த பல தசாப்தங்களாக ஆற்றிவரும் பங்களிப்புகளை நாம் என்றும் நன்றியுடன் நினைவுகூருகின்றோம். ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பான மேற்படி நோக்கங்களை வென்றெடுக்க செயற்படும் அதேவேளை • தமிழகத்தில் தங்கியுள்ள ஈழத்தமிழர்களின் நலன் மற்றும் மறுவாழ்வு தொடர்பாகவும்,

• இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிலையான தீர்வை ஏற்படுத்தும் விடயங்களிலும்> தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளுக்கும் இடையில் ஒருமித்த கருத்தொற்றுமை உருவாக்கப்படுவது காலத்தின் தேவையாகும் என்றும் நாம் கருதுகின்றோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள கட்சிகள் மட்டுமன்றி – ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை, ஈழத்தமிழ் அகதிகளின் நலன் சார்ந்த விடயங்களில் அக்கறையுடன் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் இந்திய–இலங்கை மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் நிரந்தரமாக தீர்வுகாணும் விடயங்களில் அக்கறையுடன் செயற்படக்கூடிய அரசியல் கட்சிகளது பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஓர் அனைத்துக் கட்சி ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்படுவது மிகவும் பயனுள்ளதாக அமையும் என நாம் கருதுகின்றோம். அவ்வாறானதோர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடாக> ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் தமிழகத்தின் ஒருமித்த நிலைப்பாட்டை உருவாக்கும் வகையில் ஒரு அனைத்துக் கட்சி மாநாட்டை நடத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது அவசியமானது என்பதும் எமது வேண்டுகோளாகும். அத்தகைய ஒருமித்த அரசியல் நிலைப்பாட்டுடன், இந்திய ஒன்றிய அரசுக்கு வலுவான ஜனநாயகச் செய்தியை எடுத்துரைப்பதுடன், கட்டமைப்பு சார் இனவழிப்பை தொடர்ந்தும் மேற்கொண்டுவரும் சிறிலங்கா அரசுக்கும் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளுக்கும் ஈழத்தமிழர்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல என்பதையும், ஈழத்தமிழர்களுடன் தமிழகம் எப்போதும் துணையாக நிற்கும் என்ற செய்தியையும் வெளிப்படுத்துவதாக அமையும்.

நன்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர் தலைவர் – தமிழ்த் தேசியப் பேரவை

Screenshot
Screenshot
Screenshot
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button