இலங்கைதமிழீழம்தமிழ்

தொடர்ந்து ஏமாற்றப்படும் மயிலிட்டி மக்கள்;11 ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

தமிழீழத்தில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டுகளில்  இராணுவத்தால் வலுக்கட்டாயமாக மயிலிட்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்த பொதுமக்கள் தமது சொந்த நிலங்களிலிருந்து  வெறியேற்றப்பட்டு தற்போது  36 வருடங்கள் ஆகின்ற போதும் இதுவரை அவர்களின் காணிகள் விடுக்கப்படவில்லை.
உயர்பாதுகாப்பு வலயம் எனும் போர்வையில் மக்களின் காணிகள் அபகரிப்பு செய்யப்பட்டு இராணுவத்தால் விவசாயம் மற்றும் ஏனைய வியாபார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது மிகவும் கவலைக்குரிய விடயம் ஆகும்.
வெற்று நிலங்களாகவும் விவசாய மற்றும் வியாபார நடவடிக்கைளுக்காகவும் இராணவத்தினருக்கு பயன்பட்டும்,
நிலங்களுக்கு சொந்தமான மக்களுக்கு பயன்படாமலும் இருக்கும் காணிகளை மீட்டு மக்களிடம் வழங்குமாறு அரச அதிபர் மற்றும் ஏனைய அதிகாரிகளிடமும் மக்கள் கோரிக்கை விடுத்து தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று 11 ஆவது வாரமாக இந்த காணி மீட்பு போராட்டம் இடம்பெற்று வருகிறது.வாக்குறுதிகள் எமக்கு வேண்டாம் , நாம் வாழ்வதற்கு எமது காணிகளே எமக்கு வேண்டும் என்ற கோஷத்துடன் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
 
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button