இலங்கை

புதிய கடற்படைத் தளபதி நியமனம்

இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

இதற்கமைய, இதுவரை கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ வைஸ் அட்மிரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டு, இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

 

 

 

இதற்குரிய நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் நாளை (01) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button