
உலகில் மற்ற பகுதிகளைக் காட்டிலும் ஐரோப்பிய கண்டம் இருமடங்கு வேகத்தில் வெப்பமடைந்து வருவதாக ஐ.நா. உலக வானியல் அமைப்பும், உலக சுகாதார அமைப்பும் கவலை தெரிவித்துள்ளன.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வரலாற்றுப் பதிவுகள் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளன.
இந்நிலையில், பிரான்சில் கடுமையான வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,௦௦௦ கடந்துள்ள நிலையில், தற்போது சுமார் 15 கோடி மக்கள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதோடு,பாடசாலைகள் மூடப்பட்டு, மின் கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.
அத்துடன் ஜெர்மனியில் கடுமையான வெயில் காரணமாக டிராம் வண்டிகள் செல்லும் தண்டவாளங்கள் உருகும் அளவிற்கு அசாதாரண சூழல் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, தெற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் கடைகளில் உள்ள சொக்லேட்டுகள் உருகுவது, மக்கள் வெயிலில் பாத்திரங்களை வைத்து முட்டை சமைப்பது போன்ற அதிர்ச்சியூட்டும் காணொளிகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





