இலங்கை

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு அவசர எச்சரிக்கை!

நாட்டின் கடற்பரப்புகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. விடுத்துள்ளது.

 

 

 

இந்நிலையில், கங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

அத்துடன்,சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0-3.0 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

 

 

 

எனவே, இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக விடுக்கப்படும் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் மீனவர்கள் மற்றும் கடற்சார் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button