
இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,189 ஆக அதிகரித்துள்ளதாகவும் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு சுமார் 950 முதல் 1,000 வரை புதிய நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும், கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 1,030 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மூன்று நாட்களிலும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இதற்கு பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
மாவட்ட அடிப்படையில் அதிகளவிலான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் (11,163 பேர்) பதிவாகியுள்ளனர். அதேபோன்று கம்பஹாவில் 10,662 பேர், மாத்தறையில் 3,921 பேர், களுத்துறையில் 3,600 பேர் மற்றும் இரத்தினபுரியில் 3,279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 124 வலயங்கள் அதிக அவதானமிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன





