
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, ஜூலை 7ஆம் திகதி நள்ளிரவு வரை பிரகடனங்களை இணையவழியில் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமானோர் ஒரே நேரத்தில் படிவங்களை சமர்ப்பிக்க முயன்றதால் ஏற்பட்ட இணையதள தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக, இன்று (30) இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பணிப்பாளர் நாயகம் ரங்கா திசாநாயக்க எச்சரித்திருந்தார்.
தற்போதைய நீட்டிப்பு மூலம் அனைத்து தொடர்புடையவர்களும் தங்களது கட்டாயப் பிரகடனங்களை நிறைவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.





