இலங்கை

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

 

 

 

இப்பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீ.-க்கு மேல் கனமழை பெய்யக்கூடும்.

 

 

 

மேலும், ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

மேலும், மத்திய உயர்நிலங்களின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு சுமார் 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

 

 

 

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு நிலையம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button