
முன்னெடுத்தவர்களுக்கே விசாரணை நடவடிக்கைகளை ஒப்படைக்குமாறு அருட்தந்தை சிறில் காமினி கோரியபோது மீண்டும் இரகசிய பொலிஸின் பணிப்பாளராக இந்தத் தாக்குதல் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஷானி என்பதை நீங்கள் அறிந்து வைத்திருக்கவில்லையா?
சஹ்ரான் உள்ளிட்ட முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடத்தப்படுமென புலனாய்வு பிரிவுகளால் தகவல் வழங்கியிருந்தபோதும் சஹ்ரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் வழக்குத்தாக்கல் செய்ய வேண்டுமென்று ஏ.எம்.ஜே.அல்விஸ் ஜனாதிபதி விசாரணைக்குழுவில், ஷானி அபேரத்ன மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளபோதும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் மூடிமறைப்பதற்கு உங்களிடம் ஏதும் இருப்பதாலா அவர்களுக்கே மீண்டும் அதே பதவிகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அப்படியில்லை என்றால் அவ்வாறு கோரிக்கை முன்வைத்ததற்கான காரணம் என்ன?
இந்தத் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டபோது இரகசிய பொலிஸில் பிரதான பதவியை வகித்த ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகரவிடம் மீண்டும் விசாரணைகளை ஒப்படைக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் அப்போது கிழக்கு மாகாண கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவை பிரதி பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கான கோரிக்கையும் ஒன்றுக்கொன்று பரஸ்பர வேறுபாடுடையவை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வொன்றில், பிரதான சூத்திரதாரி அபுஹிந்த் என்று அருட்தந்தை சிறில் காமினி குறிப்பிட்டிருந்தார். ஆனால் அப்போது வரையில் ஏற்கனவே பிரதான சூத்திரதாரி சுரேஷ் சலே என்று அருட்தந்தை சிறில் காமினியும் ஆசாத் மௌலானாவும் கூறிவிட்டார்கள். அவ்வாறிருக்கையில், அபுஹிந்த என்று தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் சுரேஷ் சலேவே பிரதான சூத்திரதாரி என்று கூறுகிறார். இவ்வாறு இடைக்கிடை சூத்திரதாரியின் பெயரை மாற்றிக் கூறுவதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள காரணம் என்ன?
இறுதியாக, அபுஹிந்த பிரதான சூத்திரதாரி என்பது தொடர்பில் உங்களிடம் இருக்கும் தகவல்களை விசாரணை அதிகாரிகளுக்கு ஒப்படைத்துள்ளீர்களா? அவ்வாறில்லாவிட்டால் அதற்கு காரணம் என்ன?
அருட்தந்தை சிறில் காமினியிடம் வினவுவதற்கு 35 கேள்விகள் இருக்கின்றன. முதற்கட்டமாக 10 கேள்விகளை வினவுகிறோம். பதில் கிடைத்தும் மிகுதி கேள்விகளைதொடுப்போம் என்றார்.





