இலங்கை

மட்டக்களப்பில் வர்த்தக சங்கத்தினர் போராட்டம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி நகரில் களுவாஞ்சிகுடி எரிபொருள் வர்த்தக சங்கத்தினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

 

 

 

இந்த போராட்டமானது நேற்று (22) பிற்பகல் களுவாஞ்சிகுடி நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக, இடம்பெற்றது.

 

 

 

இந்த எரிபொருள் நிலையத்தை குத்தகைக்கு எடுத்து நடத்துபவர் மேல் சில குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.  

 

 

 

வருடத்தில் சுமார் 200 நாட்கள் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை என்றும், பெற்றோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுவதோடு நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

 

 

இந்நிலையில்,விவசாயிகளும் கடற்றொழிலாளர்களும் அதிகம் வாழும் இப்பகுதியில், நீண்டகாலமாக நிலவும் இந்த எரிபொருள் தட்டுப்பாட்டினால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

எனவே, தற்போதைய குத்தகைதாரரிடமிருந்து இந்த எரிபொருள் நிலையத்தை அரசாங்கம் மீளப்பெற்று, வருடம் முழுவதும் 24 மணி நேரமும் முறையாக நடத்தக்கூடிய தகுதியான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோசம் எழுப்பினர்.

 

 

 

இந்நிலையில் குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button