
ஆர்மீனியா நாட்டில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு 07ஆம் திகதி நடைபெற்றதை தொடர்ந்து இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் ஆர்மீனிய பிரதமர் நிக்கோல் பாஷின்யான் தலைமையிலான ஆளும் ‘சிவில் காண்ட்ராக்ட்’ கட்சி 49.81 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ‘ஸ்ட்ராங் ஆர்மீனியா’ கட்சியின் தலைவரும், கோடீஸ்வரருமான சாமுவேல் கரபெட்யான் 23.29% வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்துள்ளார்.
அத்துடன் வெற்றி பெற்றுள்ள ‘சிவில் காண்ட்ராக்ட்’ கட்சி ஆர்மீனியாவை ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) இணைப்பதை நோக்கமாகக் கொண்டது. மாறாக, தோல்வியடைந்த ‘ஸ்ட்ராங் ஆர்மீனியா’ கட்சி ரஷ்யாவுடன் வர்த்தக உறவை வளர்க்க விரும்பும் கொள்கையைக் கொண்டது.
இந்நிலையில் ஆர்மீனியா மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதால், தங்கள் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் என பிரதமர் நிக்கோல் பாஷின்யான் அறிவித்துள்ளார்.





