உலகம்

எ.ன்.பி.சி நேர்காணலில் பரபரப்பு – பாதியிலேயே வெளியேறிய ட்ரம்ப்

அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனமான என்பிசி நியூஸ் நெறியாளர் கிறிஸ்டன் வெல்கர் உடன் ஏற்பட்ட கடுமையான விவாதம் மற்றும் முரண்பாடு காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேர்காணலில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார்.

 

 

 

இதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் கேள்வியெழுப்பபட்டபோது, ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை, முந்தைய ஆட்சியாளர்களின் திட்டங்கள், ட்ரம்ப் நிர்வாகத்தின் ‘Anti-Weaponisation’ நிதி மற்றும் கலிபோர்னியா தேர்தல் முறைகேடு போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

 

 

 

மேலும் கலிபோர்னியா தேர்தலில் முறைகேடு நடப்பதாக ட்ரம்ப் கூறிய குற்றச்சாட்டை நெறியாளர் கிறிஸ்டன் வெல்கர் நிராகரித்தார். அத்துடன் Anti-Weaponisation’ நிதி குறித்துப் பேசும்போது, ஜோ பைடனின் மோசமான ஆட்சிதான் காரணம் என குற்றம் சுமத்தினார். இதற்கு சரியான ஆதாரம் இல்லை என நெறியாளர் கூறிய நிலையில்

 

ஆதாரம் இருப்பதாக ட்ரம்ப் வாதிட்டுள்ளார்.

 

 

 

இந்நிலையில் ஊடகங்கள் சார்பு நிலையுடன் செயல்படுவதாகக் குற்றம் சுமத்திய ட்ரம்ப், நேர்மையற்ற ஊடகங்களைக் கொண்ட நாடு சிறந்த நாடாக இருக்க முடியாது எனக்கூறி நேர்காணலை பாதியிலேயே நிறைவு செய்துக் கொண்டு வெளியேறினார்.

 

 

 

இந்த விவகாரம் தற்போது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button