இந்தியா

பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதல்வர் ஜோசப் விஜய்

தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுடன் முதல்வர் ச. ஜோசப் விஜய் செஸ் விளையாடியுள்ளார்.

 

 

 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை இன்று (08) சந்தித்து செஸ் வீரர் பிரக்ஞானந்தா வாழ்த்துப் பெற்றார். அப்போது பிரக்ஞானந்தாவுடன் முதல்வர் விஜய் செஸ் விளையாடினார். நோர்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் திகதி வரை நடைபெற்றது.

 

 

 

இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன், வின்சென்ட் கெய்மர் போன்ற ஜாம்பவான்கள் கலந்துகொண்டனர். இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்தி புகழ்பெற்ற நோர்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா வரலாற்றுச் படைத்தார்.

 

 

 

இதனை தொடர்ந்து, பிரக்ஞானந்தாவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

 

 

 

அத்துடன் முதலமைச்சர் விஜய் பிரக்ஞானந்தாவிற்கு ஊக்கத்தொகையாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கௌரவித்தார்.

 

 

 

நோர்வே செஸ் தொடரில் முன்னணி வீரரான கார்ல்செனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா இரண்டு முறை வீழ்த்தி அசந்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button