இலங்கை

தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் தேசிய மட்ட போட்டிகள் ஆரம்பம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இலங்கை இளைஞர் கழக சமேளனம் ஆகியன இணைந்து நடத்தும் 36-வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் குழுப்போட்டிகள் இம்முறை நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களின் 14 இடங்களில் நடாத்தப்படவுள்ளன.

 

 

 

இதன்போது ஆண் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடைபெறவுள்ளதுடன் பீச் வொலிபோல், நீச்சல் போட்டி, பெட்மிட்டன், கரம், கிரிக்கெட், கபடி செஸ், வலைப்பந்தாட்டம் (நெட்போல்), கூடைப்பந்தாட்டம் (பாஸ்கெட் போல் ), உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், எல்லே, கயிறிழுத்தல், இரவு மரதன் ஓட்டப்போட்டி ஆகியன முறையே நீர் கொழும்பு, இரத்தினபுரி, கொழும்பு, காலி, மாத்தறை, மஹரகம, குருநாகல், யாழ்ப்பாணம், கம்பஹா ஹம்பாந்தோட்டை ஹோமாகம ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கின்றன.

 

 

 

ஜூன் 6-ம் திகதி ஆரம்பமாகவுள்ள பீச் வொலிபோல் ( கடற்கரை கரப்பந்தாட்டம் ) போட்டியுடன் ஆரம்பமாவதுடன் இப்போட்டிகள் ஜூன் 6ஆம் 7ஆம் திகதிகளில் நீர்கொழும்பு பீச் பார்க் கடற்கரையில் நடைபெறவுள்ளன.

 

 

 

பிரதேச மட்டப் போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்றவர்கள் மாவட்ட மட்ட போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்கள் தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்படுவர்.

 

 

 

இம்முறை 36-வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button