உலகம்

ஈரான் எல்லையில் நள்ளிரவில் நடந்த விபரீதம்!

ஈரானின் கடலோர மாகாணமான புஷெஹ்ரில் (Bushehr) ஊடுருவிய “பகைமைப் போக்குடைய விசித்திர வானூர்தி” (Hostile Aircraft) ஒன்றை ஈரானிய வான் பாதுகாப்புப் படையினர் (Air Defences) நடுவானில் இடைமறித்து வெற்றிகரமாக அழித்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் அவசரத் தகவலை வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் சர்வதேச அரசியல் மற்றும் இராணுவத் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று இரவு நிகழ்ந்த இந்த வான்வழிச் சம்பவம், ஈரானிய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பகைமை நாட்டின் வானூர்தியை ஏவுகணைகள் மூலம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது” என ஜாம் மாவட்டத்தின் (Jam County) ஆளுநர் மசூத் தங்கேஸ்தானி (Masoud Tangestani) தெரிவித்துள்ளார்.

அத்துடன், வான் பாதுகாப்புப் படையினரின் இந்தத் துரித நடவடிக்கையை அடுத்து, தற்சமயம் அந்த நகரம் முற்றிலும் வழமையான மற்றும் பாதுகாப்பான நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இந்த அதிரடி இடைமறிப்புத் தாக்குதலானது கடந்த சில மணி நேரத்திற்குள் அரங்கேறியுள்ளதாக ஈரானின் உத்தியோகபூர்வ அரச ஒளிபரப்புச் சேவை உறுதிப்படுத்தியுள்ளது என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button