
இலங்கை தற்போது பாரிய பொருளாதார அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், அரசாங்கம் பொருளாதாரம் குறித்த போலிப் புள்ளிவிபரங்களை முன்வைத்து வருவதாகவும் எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி தலைமையகத்தில் சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்
.ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரப் பாதிப்புகளை மறைத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டில் எரிபொருள் மற்றும் பால் மா விலைகள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு அளவு மற்றும் இறக்குமதிச் செலவுகள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், தேவையான இறக்குமதி காப்புறுதித் தரநிலைகளைப் பேணுவதில் இலங்கை சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்ட நிபந்தனைகள், வெளிநாட்டுப் பண அனுப்புதல்கள் குறைவடைதல், உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் நாணய மதிப்பு வீழ்ச்சி அடைதல் போன்றன எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயங்கள் என்றும் விவரித்தார்.
அத்துடன், எதிர்வரும் 2028ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டுக் கடன் மறுசெலுத்துகை கணிசமான அளவில் அதிகரிக்கும் என்றும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.





