
அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பையும் மீறி, ‘ஹியூஜ்’ (HUGE) என்ற ஈரானியக் கப்பல் இந்தோனேசியாவின் லோம்போக் நீரிணை (Lombok Strait) ஊடாக ரியாவு தீவுக்கூட்டத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாக சர்வதேச கடல்சார் கண்காணிப்பு அமைப்புகள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த கப்பலானது 19 இலட்சம் பீப்பாய்கள் மசகு எண்ணெயுடன் ரியாவு தீவுக்கூட்டத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கப்பலில் உள்ள எண்ணெய்யின் பெறுமதி சுமார் 220 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.





