விளையாட்டு

சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரியான் ரிகெல்டன் படைத்துள்ளார்.

 

வெறும் 44 பந்துகளில் அவர் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் சனத் ஜயசூரியவின் 18 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

 

சனத் ஜயசூரிய 2008ம் ஆண்டு மும்மை அணி சார்பில் 45 பந்துகளில் சதம் அடித்து இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

 

எனினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்களை குவித்திருந்தது.

 

தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரர் ரியான் ரிகெல்டன் 44 பந்துகளில் தனது சதத்தை நிறைவுசெய்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆட்டமிழக்காமல் 123 ஓட்டங்களை குவித்தார்.

 

இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அடிக்கப்பட்ட அதிவேக சதம் மற்றும் அந்த அணியின் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஓட்டம் ஆகிய சாதனைகளை அவர் முறியடித்தார்.

 

எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button