
நாகப்பட்டினம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்றொழிலாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு ஆற்காட்டிற்கு தென்கிழக்கே ஒன்பது கடல் மைல் தொலைவில் இடம்பெற்றுள்ளது.
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக கடற்றொழிலாளர்களைத் தாக்கி காயப்படுத்திய இலங்கை கடற்றொழிலாளர்கள், அவர்கள் பிடித்து வைத்திருந்த கடற்றொழிலாளர்களையும் கொள்ளையடித்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்றொழிலாளர்களில் ஒருவரை தமிழக கடற்றொழிலாளர்கள் பிடித்து, மாநில மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
காயமடைந்த ஏனைய தமிழக கடற்றொழிலாளர்கள் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த ஏனைய தமிழக கடற்றொழிலாளர்கள் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக கடலோரக் காவல் படையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஆகாஷ்வானி செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது





