தமிழீழம்தமிழ்தமிழ் நாடு

தமிழக மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ் மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டம்

தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அதனை கட்டுப்படுத்த கோரியும் யாழ் மீனவர்களால்  குறிகட்டுவான்  கடற்பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நயினாதீவுக்கும் குறிகாட்டுவனுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் கண்ணாடி இழை படகுகளில் கறுப்பு கொடிகளை பறக்க விட்டவாறு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய  இழுவை மடி படகுகளில் தொடர்ச்சியாக , மனிதாபிமானமற்ற முறையில் எல்லை தாண்டி கடல் வளக் கொள்ளையில் ஈடுபடுவதுடன்,தீவக மற்றும் வடக்கு கடற்தொழிலாளர்களின்  பல கோடி  ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் கடற்தொழில் உபகரணங்கள் சேதமாக்கப்படுகின்றன.

அதனால் வடக்கு மீனவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்திய இழுவை படகுகளைக் கட்டுப்படுத்தக் கோரி போராட்டத்தை முன்னெடுத்ததாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அதனை கட்டுப்படுத்த கோரியும் கடற்தொழிலாளர்களால் குறிகட்டுவான்  கடற்பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button