இந்தியா

தமிழக சட்டமன்றத் தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 56.81சதவீத வாக்குப்பதிவு!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் எனப் பலரும் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இன்று மதியம் 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரையில் மொத்தம் 3,25,79,329 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பதிவான வாக்கு சதவீத விவரங்கள் பின்வருமாறு:

 

 

 

கொங்கு மண்டலம்: திருப்பூரில் அதிகப்பட்சமாக 62.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து நாமக்கல்லில் 62.51 சதவீதமும், ஈரோட்டில் 61.79 சதவீதமும், சேலத்தில் 61.42 சதவீதமும் வாக்குகள் பதிவாகி விறுவிறுப்பைக் காட்டியுள்ளன.

 

வட தமிழகம்: விழுப்புரம் மாவட்டத்தில் 59.23 சதவீதமும், ராணிப்பேட்டையில் 58.62 சதவீதமும், வேலூரில் 58 சதவீதமும், செங்கல்பட்டில் 56.28 சதவீதமும், திருவள்ளூரில் 55.45 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

மத்திய மற்றும் தென் தமிழகம்: கரூரில் 60.77 சதவீதமும், திண்டுக்கல்லில் 59.79 சதவீதமும், மதுரையில் 58.18 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. பெரம்பலூரில் 57.55 சதவீதமும், விருதுநகரில் 57.27 சதவீதமும், நாகப்பட்டினத்தில் 57.11 சதவீதமும், அரியலூரில் 55.18 சதவீதமும் மக்கள் வாக்களித்துள்ளனர்.

 

குறைவான பதிவுகள்: தூத்துக்குடியில் 52.55 சதவீதமும், ராமநாதபுரத்தில் 51.54 சதவீதமும் பதிவாகியுள்ள நிலையில், நீலகிரி (50.42 சதவீதம்), நெல்லை (50.40 சதவீதம்) மற்றும் கன்னியாகுமரி (50.33 வீதம்) ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக 50 சதவீதத்தை ஒட்டியே காணப்படுகிறது.

 

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும், மக்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதால் மாலைக்குள் வாக்கு சதவீதம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button