இந்தியா

வாக்காளர்களை வரவேற்கும் ரோபோ: வேலூரில் அதிகாரிகளின் வினோத முயற்சி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களைக் கவரும் வகையில் வேலூரில் உள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றில் ரோபோ (இயந்திர மனிதன்) மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

சுமார் 5 கோடியே 73 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட இந்த ஜனநாயகத் திருவிழாவில், வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வாக்காளர்களை வரவேற்க இந்த வினோத முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தமது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில், வாக்குச்சாவடிக்கு வருகை தரும் மக்களை இந்த ரோபோ இன்முகத்துடன் வரவேற்று வருகின்றது

ஆங்காங்கே அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான புதுவிதமான முயற்சிகள் வாக்காளர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன

 

காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இவ்வாறான நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது சிறந்த ஒரு விடயமாக கருதப்படுகின்றது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button