இந்தியா

தமிழக சட்டமன்றத் தேர்தல்: தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார் தவெக தலைவர் விஜய்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

 

சென்னையிலுள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட விஜய், நீலாங்கரையில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு நேரில் வருகை தந்தார்.

அங்கு பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை அவர் நிறைவேற்றினார்.

 

நடிகர் விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய பின்னர் சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பதால், அவரது வாக்களிப்பு அரசியல் ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

 

விஜய் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தபோது, அங்கு திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டு அவரை வரவேற்றனர்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், கூட்டத்தைக் கட்டுப்படுத்தி விஜய்யை வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் சென்றனர்.

 

வாக்களித்த பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு எனத் தெரிவித்தார்.

 

தமிழகம் முழுவதும் காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button