உலகம்

ட்ரம்ப் குடும்பத்திற்கு புதிய சிக்கல் : கிரிப்டோ விவகாரத்தில் கோடீஸ்வரர் ஜஸ்டின் சன் தொடர்ந்த அதிரடி வழக்கு!

ட்ரம்ப் குடும்பத்தின் வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியல் (World Liberty Financial) கிரிப்டோ நிறுவனம், அதன் முக்கிய முதலீட்டாளரான கோடீஸ்வரர் ஜஸ்டின் சன் (Justin Sun) மூலம் சட்ட ரீதியான சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மகன் எரிக் ட்ரம்ப் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தன்னை மிரட்டி பணம் பறிக்க முயல்வதாக, ஜஸ்டின் சன் குற்றம் சாட்டியுள்ளார்

தன்னிடம் உள்ள றுடுகுஐ டோக்கன்களை சட்டவிரோதமாக “முடக்கி” அதன் மூலம் கிடைக்கும் நிர்வாக வாக்கெடுப்பு உரிமைகளை (Governance rights) பறித்துவிட்டதாக சன் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

முறையான காரணமின்றி தனது டோக்கன்களை நிரந்தரமாக அழித்துவிடுவோம் என நிறுவனம் அச்சுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் நிதியை முதலீடு செய்யுமாறு தன்னை நிறுவனம் வற்புறுத்தியதாகவும், அதற்கு இணங்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் சான் பிரான்சிஸ்கோ கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

எனினும் வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியல் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

 

ஜஸ்டின் சன் தனது சொந்த தவறுகளை மறைக்க இத்தகைய ஆதாரமற்ற புகார்களைக் கூறுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button