
பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை வழங்கும் இஸ்ரேலின் புதிய சட்டத்திற்கு அமெரிக்கா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இந்த சட்டத்தைக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகின்றது.
இந்த விடயத்தில், பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்படுபவர்களுக்கான சட்டங்கள் மற்றும் தண்டனைகளைத் தீர்மானிக்கும் இஸ்ரேலின் இறையாண்மை உரிமையை அமெரிக்கா மதிப்பாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தொடர்புடைய நடவடிக்கைகள் முறையான மற்றும் நியாயமான நீதிமன்ற விசாரணைகள் மூலம், சர்வதேச பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு முன்னெடுக்கப்படும் என நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முன்னதாக, பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபடும் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திற்கு இஸ்ரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சட்டம் பாலஸ்தீனியர்களை மட்டுமே இலக்கு வைப்பதாக ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ள போதிலும், அமெரிக்கா இதனை இஸ்ரேலின் உள்நாட்டுச் சட்ட உரிமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளது.





