உலகம்

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டை வீசிய அமெரிக்கா!! ட்டிம்ப் போடும் திட்டமென்ன?

ஈரான் மீது அமெரிக்கா பங்கர்-பஸ்டர் குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

 

தெஹ்ரானுக்கு தெற்கில் அமைந்துள்ள இஸ்பஹானில் நகரில் உள்ள முக்கிய ஆயுதக் கிடங்கை இலக்கு வைத்து சுமார் 2,000 பவுண்டு எடை கொண்ட பங்கர்-பஸ்டர் குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

 

இது குறித்த கணொளியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

எந்த விளக்கமும் இணைக்கப்படாத அந்தக் காணொளி, இஸ்பஹான் தாக்குதலைக் காட்டுவதாக அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டது.

 

பங்கர் பஸ்டர் (Bunker Buster) என்பது நிலத்தடியில் ஆழமாகப் புதைந்துள்ள பதுங்கு குழிகள், ஆயுதக் களஞ்சியங்கள் மற்றும் அணுசக்தி மையங்களை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சக்திவாய்ந்த ஏவுகணை அல்லது குண்டு ஆகும்.

 

இவை கான்கிரீட் மற்றும் பாறைகளைத் துளைத்துக்கொண்டு, மிக ஆழத்தில் வெடித்துச் சிதறும் திறன் கொண்டவை ஆகும்.

 

இந்நிலையில், ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் அதிக எண்ணிக்கையிலான ஊடுருவும் வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் தெரிவித்துள்ளார்.

 

ட்ரம்ப் வெளியிட்டுளு்ள அந்தக் காணொளியில், தொடர்ச்சியான வெடிப்புகளும் அதைத் தொடர்ந்து ஏற்படும் கடுமையான தீ மற்றும் புகை மண்டலங்களும் பதிவாகியுள்ளன.

 

இது, தாக்குதல் நடந்த இடத்தில் சேமிக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளால் இரண்டாம் நிலை வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

 

ஈரான் தனது சுமார் 540 கிலோகிராம் என மதிப்பிடப்பட்ட, அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒரு பகுதியை இஸ்பஹான் நகரில் உள்ள நிலத்தடி வசதிகளுக்கு மாற்றியிருக்கலாம் என அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

 

இதனால் இஸ்பஹானின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்திருந்த பின்னணியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

இஸ்பஹானை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மூலம் ஈரானின் இராணுவ திறனை நேரடியாக பாதிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

 

இதனால், அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் உருவாகியுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதேவேளை, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

 

ஜனாதிபதி டிரம்ப், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப்புடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

எவ்வாறாயினும், ஈரான் அதிகாரிகள் இந்த தகவலை முழுமையாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button