உலகம்

90 மில்லியன் மக்களின் உயிருக்கு ஆபத்து – ஈரானிய தூதுவர் கண்டனம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் “பொறுப்பற்ற இராணுவவாதம்” குறித்து ஐக்கிய நாடுகளுக்கான ஈரானிய தூதுவர் அலி பஹ்ரைனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய அவர், ஈரான் ஒருபோதும் “அச்சுறுத்தல்களுக்கோ அல்லது சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கோ” பணியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் தற்போதைய மிக அவசரமான மனித உரிமைப் பிரச்சினை என்பது, தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களால் 90 மில்லியன் மக்களின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலே ஆகும்.

 

பெப்ரவரி 28ஆம் திகதி மோதல்கள் தொடங்கியதில் இருந்து இதுவரை 1,300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

 

7,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

எனினும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பு வேண்டுமென்றே பொதுமக்கள் மற்றும் கலாசாரத் தளங்களை இலக்கு வைப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

இத்தகைய பொறுப்பற்ற இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் கண்டும் காணாமல் இருப்பது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.

இந்த அலட்சியப்போக்கு தொடர்ந்தால், இதனால் பாதிக்கப்படும் கடைசி நாடாக ஈரான் இருக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், ஈரான் சரியாக என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?” என்று கேள்வி எழுப்பிய ஐக்கிய நாடுகளுக்கான ஈரானிய தூதர் அலி பஹ்ரைனி, அச்சுறுத்தல்களுக்குத் தமது நாடு ஒருபோதும் தலைவணங்காது என்பதை உறுதிபடக் கூறியுள்ளார்

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button