உலகம்

பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

காபூலில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புணர்வாழ்வளிக்கும் வைத்தியசாலையொன்றின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது.

 

தலைநகரில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலையை இலக்கு வைத்து நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில்

நோயாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உயிரிழந்துள்தாக கூறப்படுகிறது.

 

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் முற்றிலும் மறுத்துள்ளது. இது தவறான தகவல் என்றும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் கூறப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

 

மேலும், காபூலும் நங்கர்ஹார் மாகாணத்திலும் உள்ள இராணுவ இலக்குகளை மட்டுமே தங்களது படைகள் இலக்கு வைத்ததாக பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.

 

இரு நாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் பதற்ற நிலைமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button