
நாட்டில் மீண்டும் எரிபொருள் QR குறியீடு முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், தொடருந்து சேவைகள் எவ்வித தடையுமின்றி வழமை போல் இயங்கும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தொடருந்து திணைக்களத்தின் பொது மேலாளர் கே. ரவீந்திர பத்மப்பிரிய வழங்கிய விளக்கத்தில், தொடருந்து சேவைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நேரடியாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்
பொதுமக்களுக்கான QR ஒதுக்கீட்டு முறைமை தொடருந்து சேவைக்கு பொருந்தாது.
இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பிரத்தியேக எரிபொருள் நிலையங்கள் ஊடாகவே தொடருந்துகளுக்கு எரிபொருள் நிரப்பப்படுகிறது.
மேலும் தொடருந்துகள் திட்டமிட்டபடி தடையின்றி இயங்கும் என அவர் உறுதியளித்துள்ளார்
தொடருந்து திணைக்களத்திற்கு என ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிலையங்கள், தொடருந்து நடவடிக்கைகளுக்காக மாத்திரமே பயன்படுத்தப்படும்.
அங்கிருந்து தனியார் துறைக்கோ அல்லது ஏனைய வாகனங்களுக்கோ எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என அவர் தெளிவுபடுத்தினார்





