விளையாட்டு

ஸிம்பாப்வே அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி

ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சுப்பர் 8 சுற்றில், ஸிம்பாப்வே அணிக்கெதிரான இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

டெல்லியில் நடைபெற்ற குறித்த போட்டியில் தென்னாப்பிரிக்க மற்றும் ஸிம்பாப்வே ஆகிய அணிகள் மோதின.

 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் சிக்கந்தர் ராசா 73 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

 

இந்தநிலையில் 154 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 17.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

துடுப்பாட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியின் சார்பில் டெவால்ட் பிரேவிஸ் 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button