உலகம்

ஈராக் தலைநகர் வானூர்தி நிலையத்தில் தாக்குதல்

ஈராக் தலைநகர் பக்தாத்தில் உள்ள சர்வதேச வானூர்தி நிலையத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கத் துருப்புகளை இலக்கு வைத்து ஆளில்லா வானூர்தி (Drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

பக்தாத் சர்வதேச வானூர்தி நிலைய வளாகத்தில் உள்ள அமெரிக்க இராணுவப் பிரிவுகள் மீது இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இந்தத் தாக்குதலைத் தாங்களே நடத்தியதாக ஈராக்கின் ‘ஷியா’ (Shia) போராளிகள் குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 

தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

 

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்கப் படைகளை வெளியேற வலியுறுத்தி இந்தப் போராளிகள் குழு தொடர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

தாக்குதலைத் தொடர்ந்து வானூர்தி நிலையத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

உள்ளூர் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் காவல்துறை இணைந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button