உலகம்

அதிரும் ஈராக் : துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் – பாக்தாத்தின் ‘பசுமை வலயத்திற்குள்’ பெரும் கலவரம்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அதீத பாதுகாப்புமிக்க ‘பசுமை வலயத்திற்குள்’ (Green Zone) நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகம் மற்றும் முக்கிய அரச அலுவலகங்கள் அமைந்துள்ள பாக்தாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள், அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் மீது சரமாரியாகக் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

 

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

 

இந்தப் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாகவும், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

தற்போது அந்தப் பகுதியில் மேலதிக பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்கத் தூதரகம் உள்ளிட்ட முக்கிய இடங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button